மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் ஜே.வி.பி யே! சஜித் குற்றச்சாட்டு

Mahinda Rajapaksa Sajith Premadasa Janatha Vimukthi Peramuna
By Shadhu Shanker Jul 14, 2024 11:28 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) ஆட்சிக்குக் கொண்டு வர கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குத் திரட்டும் திட்டத்தை இந்த மக்கள் விடுதலை முன்னணியினரே முன்னெடுத்தனர் என சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றஞ்சாட்டியுள்ளார்.

களுத்துறையில் நேற்று (14) நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், "ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி. தரப்பினரே முன்னெடுத்தனர்.

ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு வீடு வீடாகச் சென்று அடிமட்ட பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தது ஜே.வி.பி. தரப்பினரே. அவர்கள் ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு டீல் போட்டு வீடு வீடாகச் சென்று சுவரொட்டிகளை ஒட்டினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள இறுதி அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள இறுதி அறிவிப்பு!

சஜித் குற்றச்சாட்டு

இவர்களைப் போன்று திருடர்களுடன் எனக்கு எந்த டீலும் இல்லை. மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வர கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குத் திரட்டும் திட்டத்தை இந்த மக்கள் விடுதலை முன்னணியினரே முன்னெடுத்தனர்.

மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் ஜே.வி.பி யே! சஜித் குற்றச்சாட்டு | Sajith Accused Lead To Bring Mahinda Rajapaksa

நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்பட்டாலும், அந்தத் திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்றுக்கொள்ள நான் ஒருபோதும் விரும்பவில்லை. அதிபர் ரணில் விக்ரமசிங்க முழு நாட்டுக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருகின்றார்.

புண்ணியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான ஒருவர், தேர்தலுக்குப் பயந்து தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருந்து கொள்வதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றார். இவ்வாறான ஒருவரை நான் எனது வாழ்க்கையில் பார்த்தில்லை. போட வேண்டிய ஒவ்வொரு முடிச்சுக்களையும் அவர் போடுகின்றார்.

சிறப்புரிமைகளை வைத்து பயனடைய நினைக்கின்றார். சலுகைகள், வரப்பிரசதாசங்களை வழங்கி கட்சித் தலைவர்களை வளைத்துப் போடும் வேலையிலும் அவர் இறங்கியிருக்கின்றார். கட்சித் தலைவர்களும் பிச்சையெடுத்து பிழைக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

ராஜபக்ச ஆட்சி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் வெட்கமற்ற, கீழ்த்தரமான, கேவலமான அரசியல் கலாசாரத்துக்கும், அவ்வாறான அரசியலை முன்னெடுப்பவர்களையும் நிறுத்துகின்ற இந்தப் பேராசை அரசியலையும் முடிவுக்குக் கொண்டு வரும் காலம் நெருங்கி விட்டது.

மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்கள் ஜே.வி.பி யே! சஜித் குற்றச்சாட்டு | Sajith Accused Lead To Bring Mahinda Rajapaksa

அதிபரும் அரச தரப்பினரும் தேர்தலைக் கண்டு அஞ்சமடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியால் ஐக்கிய தேசியக் கட்சி பூச்சியத்துக்கு வீழ்ந்ததுடன், புண்ணியத்தால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதற்குக் கூட பல மாதங்கள் பிடித்தன.

மூலோபாய ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் இருப்பைப் பாதுகாக்கும் விதமாகவே இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்துள்ளனர்.

இத்தகைய சுயநல போக்குகளை விடுத்து, மக்களின் யுகத்தை உருவாக்கி, சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் அரசொன்றே தற்போது நாட்டுக்கு அவசியம்." என்றார். 

Exclusive - எனது அடுத்தக்கட்ட நகர்வுகளை கேட்டு அச்சமடைந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் - பகிரங்கப்படுத்தும் வைத்தியர் அர்ச்சுனா

Exclusive - எனது அடுத்தக்கட்ட நகர்வுகளை கேட்டு அச்சமடைந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் - பகிரங்கப்படுத்தும் வைத்தியர் அர்ச்சுனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024