நிமிர்ந்து நின்று முடிவெடுக்க முடியாத அரசியல்வாதியே சஜித் - கடுமையாக சாடிய ஜேவிபி!
Sajith Premadasa
Sri Lanka
Samagi Jana Balawegaya
By Kalaimathy
சஜித் பிரேமதாச முதுகை நிமிர்த்தி முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கடுமையாக சாடியுள்ளார்.
அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டத்திற்கு எதிராக தீர்மானம் எடுக்க முடியாத ஒருவருடன் நிற்க தாம் தயாராக இல்லை.
ஜனநாயகத்தை வெல்ல முடியுமா
அதுமட்டுமன்றி அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து நிற்க தேசிய மக்கள் சக்தியும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
முடிவெடுக்க முடியாத ஒருவருடன் நின்று ஜனநாயகத்தை வெல்ல முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்