வடக்கு - கிழக்கை அபிவிருத்தி செய்ய சஜித் தரப்பு தீர்மானம்
யுத்தம் காரணமாக பாதிப்படைந்துள்ள வடக்கு - கிழக்கை, கட்டியெழுப்ப வேண்டும் என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச(Sajith Premadasa).
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கத்தால் முடியாவிட்டால், சர்வதேசத்தின் உதவியைப் பெற்றாவது இதனைச் செய்யவேண்டும் என கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''கடந்த 70 வருடமாக எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் இருந்து அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருந்தது. ஆனால் நாம் அதை மாற்றியமைத்திருகிறோம். எதிர்கட்சியாக இருந்தாலும் மக்களது தேவையறிந்து மக்களிடத்தில் செல்கின்றோம்.
சர்வதேசத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் வடக்கு - கிழக்கு கட்டியெழுப்பப்படவில்லை. வெறும் வாய் பேச்சில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.
எமது அரசாங்கத்தின் ஆட்சி வரும் போது யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு பகுதி கட்டியெழுப்பப்படும்.
எம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் அரைகுறையாக இருப்பதாக சிலர் எம்மிடம் கேட்கிறார்கள். எங்கள் ஆட்சி மலரும் போது, அவர்களது வீட்டுதிட்ட கனவுகள் நனவாகும் என்றார்.