உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள பணம்: குற்றச்சாட்டுக்களை தூக்கியெறிந்த அநுர தரப்பு
உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பணம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) மறுத்துள்ளார்.
ஊடகவியலாளர் இன்று (04) சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியினரால் உருவாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறைத்து வைக்கப்பட்ட பணம்
தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “நாங்கள் உகாண்டா கதை எதுவும் சொல்லவில்லை, ஐக்கிய மக்கள் சக்தியினர் தான் கூறினார்கள்.
உகாண்டாவிலும் பிற நாடுகளிலும் மறைத்து வைக்கப்பட்ட பணம் இருக்கலாம் என்று அந்த நாட்களில் கூறினோம்.
பொய் குற்றச்சாட்டு
அதன் போது, டொலர்கள் நிரம்பியதாகக் கூறப்படும் கன்டெய்னர்கள் இங்கு அச்சிடப்பட்டு உகாண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மட்டுமே கூறினோம்.
அவர்களின் கொள்கை என்னவென்றால், அவர்களே பொய்களைப் பேசுகிறார்கள், அந்தப் பொய்களை நாங்கள் சொன்னதாகக் கூறுகிறார்கள், ” என்றார்.
உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதாகக் கூறி ஜனாதிபதி அநுர தற்போது மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்து வருகின்ற நிலையில் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |