மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: சஜித் உறுதி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
கல்வித்துறையில் சீர்திருத்தம்
இதன்போது எமது ஆட்சி உருவாகும்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், குறிப்பாக மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாச் சந்திரபிரகாஷ் உள்ளி்ட்ட அமைப்பாளர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |