எமது நாட்டில் தீவிரவாதத்திற்கு இடமில்லை: சஜித் பிரேமதாச
எமது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்பது போன்று, எமது நாட்டில் தீவிரவாதத்திற்கும் இடமில்லை , அனைத்து இனங்களையும் மதங்களையும் பாதகமாகப் பாதிக்கும் தீவிரவாதத்தை அனைத்து இனங்களும் மதங்களும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலி ஸாஹிரா கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அரசியல் நோக்கங்களுக்காக சில கட்சிகள் தீவிரவாதத்தை பயன்படுத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இனவாதம்
மேலும் அவர் கூறுகையில், “அதிபர் பதவிக்கு ஆசைப்பட்டு முழு நாட்டையும் துண்டு துண்டாக உடைத்து தேசிய ஒருமைப்பாட்டையும் அழித்தார்கள்.
யுத்த வெற்றியின் பின்னர் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு நாடாக அபிவிருத்தியடைவதற்கு பதிலாக அதிபராகும் கனவுக்காக இனவாதத்தை கிளப்பினார்கள்.
அதுமட்டுமின்றி மலட்டு அறுவை சிகிச்சை என்று குற்றம் சாட்டி வைத்தியர் சஃபி இடைநீக்கம் செய்யப்பட்டார், உலக சுகாதார அமைப்பின் முடிவெடுப்பவர் கூட கோவிட் காலத்தில் தகனம் மற்றும் அடக்கம் செய்வதைப் பற்றி கவனிக்கவில்லை” என்றார்.