தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுவதே : சஜித்திடம் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

Sajith Premadasa President of Sri lanka C. V. Vigneswaran Election
By Raghav Jun 12, 2024 11:40 PM GMT
Report

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் எனக் கூறும் நீங்கள் அதில் எவ்வாறான அதிகாரங்களைத் தரப் போகின்றீர்கள் என்று சஜித் பிரேமதாஸவிடம் (Sajith Premadasa) யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்(C. V. Vigneswaran),கேள்வியெழுப்பியுள்ளார்.அத்துடன் காணி, காவல்துறை அதிகாரங்கள் சம்பந்தமாக முழுமையான அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, விக்னேஸ்வரன் எம்.பியை நேற்று (12) சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ். நல்லூருக்கு (Nallur) அருகாமையில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழ் பொது வேட்பாளர் ஏன்..! சஜித்திடம் விலாவாரியாக எடுத்துரைத்த சுரேஷ்

தமிழ் பொது வேட்பாளர் ஏன்..! சஜித்திடம் விலாவாரியாக எடுத்துரைத்த சுரேஷ்

ஒற்றையாட்சி 

"யாழ்ப்பாணம் வந்துள்ள சஜித் பிரேமதாஸ என்னையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் பேசினோம்.

தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுவதே : சஜித்திடம் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு | Sajith Premadasa President Election 2024

குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகத் தான் நடைமுறைப்படுத்தப் போவதாக அவர் கூறினார்.

தமிழ் மக்களுக்குத் தான் எதனைச் செய்யப் போகின்றேன் என்பதை எனக்குக் கூறிவிட்டு செல்வதற்காகவே என் வீட்டுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

13 ஆம் திருத்தத்தின் நடைமுறை: ஜே.வி.பியை ஏளனப்படுத்தும் எதிர்க்கட்சி

13 ஆம் திருத்தத்தின் நடைமுறை: ஜே.வி.பியை ஏளனப்படுத்தும் எதிர்க்கட்சி

உண்மையான தீர்வு

மேலும், தான் எதனைத் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றேனோ அதனைத் தருவதற்குச் சகல முயற்சிகளையும் எடுத்து நிச்சயம் தருவேன் என்று அவர் கூறினார்.

 ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு என்னவெனில் நாட்டில் இருக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை முற்றாக மாற்றுவதுதான் என நான் கூறினேன்.

தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஒற்றையாட்சிக்கு முடிவு கட்டுவதே : சஜித்திடம் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு | Sajith Premadasa President Election 2024

13 தருவேன், தருவேன் என்று மீண்டும் மீண்டும் கூறுகின்றீர்கள், எதனைத் தரப் போகின்றீர்கள்? எவ்வாறான அதிகாரங்களைத் தரப் போகின்றீர்கள்? என்று அவரிடம் நான் கேட்டேன்.

அத்தோடு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை என்னவாகக் கொடுப்பதாக நீங்கள் உத்தேசித்துள்ளீர்கள் என்பது சம்பந்தமாக முழுமையான ஓர் அறிக்கையை நீங்கள் வெளியிட்டீர்களானால் உங்களுடைய மனதிலே என்ன இருக்கின்றது என்பதைப் பற்றி நாங்கள் முழுமையாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் எனக் கூறினேன்."  என  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதி ஒருவரை விடுவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

தமிழ் அரசியல் கைதி ஒருவரை விடுவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்

2005இல் விடுதலைப் புலிகள் எடுத்த தீர்மானம்! இரகசிய ஒப்பந்தத்திற்கு தயாராகும் தமிழ் தரப்பு

2005இல் விடுதலைப் புலிகள் எடுத்த தீர்மானம்! இரகசிய ஒப்பந்தத்திற்கு தயாராகும் தமிழ் தரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025