தமிழ் அரசியல் கைதி ஒருவரை விடுவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
Sri Lanka
Supreme Court of Sri Lanka
Sri Lanka Final War
By Raghav
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவினார் என்று தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஆயப்பகுதி அதிகாரியான இவர், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான கதிர்காமநாதன் மகிந்தன் அல்லது வெண்ணயனன் என்பவருக்கு உதவியதாகத் தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சட்டமா அதிபர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராகச் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், இந்த வழக்கில் இருந்து முன்னாள் ஆயப்பகுதி அதிகாரி கந்தையா யோகநாதனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்