ஒருபோதும் இணங்கமாட்டோம் - சஜித் தரப்பு அறிவிப்பு
srilanka
sajith premadasa
tissa attanayake
By Vasanth
மாகாண சபை முறைமையை நீக்குவதற்குத் தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாநாயக்க தெரிவிக்கையில், அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படை நடவடிக்கையாகவே மாகாண சபை கொண்டுவரப்பட்டது. தற்போது 40 வருடங்கள் வரை கடந்துள்ள நிலையில், அதன் நன்மை தீமை குறித்து, கருத்துக்களை முன்வைக்க முடியும்.
இந்த காலகட்டத்தில் அதனைச் செயற்படுத்துவது தொடர்பில் ஆரா ய்ந்து, அதனை நிரந்தரமாகக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகளை எடுப்பதே தவிர, அதனை நீக்குவதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.