கல்வித் தகைமை சர்ச்சை: அநுரவுக்கு முன் நிரூபித்த சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தனது கல்வித் தகைமைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
10ஆவது நாடாளுமன்றத்தின் இன்றைய(18) அமர்வின் போதே அவர் இதனை சமர்ப்பித்தார்.
முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரையான கல்வியை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும் கற்றதாக சபையில் எதிர்க் கட்சித் தலைவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கல்வி தகைமை
அத்துடன், தரம் 6 முதல் தரம் 9 வரை ரோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் கல்வி கற்றதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
அந்த வகையில், 1983-1984 ஆண்டு காலப் பகுதியில் இங்கிலாந்தில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு 2 ஏ சித்தியும், 2 பி சித்தியும் மற்றும்3 சி சித்தியும் பெற்று தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |