மக்களின் வறுமைக்கு இவர்களே காரணம்: சஜித் சாடல்
நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மக்கள் வறுமையில் சிக்கி எல்லையற்ற அளவில் அசாதாரண நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கந்தளாய் (Kantale), சேருவில நகரில் இன்று(26) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவு தேவை
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அத்தோடு வாழ்க்கைக்கான வழிகள் இன்றி தெளிவான வருமான வரிகள் இன்றி, ஒவ்வொரு நாளுக்கும் மூன்று வேளை உணவையும் பெற்றுக் கொள்ள முடியாத வறிய மக்களுக்காக ஜனசவிய, சமூர்த்தி, அஸ்வெசும, மற்றும் கெமிதிரிய ஆகிய வேலை திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை ஒன்றாக சேர்த்து, அவற்றின் குறைபாடுகளை நீக்கி, சிறந்த வேலை திட்டமொன்றை முன்னெடுப்போம்.
உணவு தேவை அல்லாத வேறு தேவைகள், சேமிப்பு, நுகர்வு, முதலீடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்களை கருத்தில் கொண்டும், வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஊடாக மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
அடிமை சேவகர்
தொடர்ந்து யாரும் வறுமையில் இருக்கக் கூடாது. வறுமை எனும் அடிமைத்தனத்திற்கு கட்டுப்படாது. பல்வேறு நிகழ்வுகளினாலும் அரசாங்கத்தின் விவேகம் அற்ற, அக்கறை இல்லாத கொள்கை திட்டங்களினால் மக்கள் வறுமையில் சிக்கி இருக்கின்றார்கள்.
வறுமையில் இருந்து கொண்டு கையேந்துகின்ற, சமூகமொன்றை உருவாக்காது, அபிமானம் உள்ள மக்கள் வாழ்கின்ற, எமது நாட்டில் எவருடைய அடிமை சேவகர்களாக இல்லாமல் தன்னம்பிக்கையுடன், தன்னிறைவோடு எழுந்து நிற்க நம்பிக்கை உள்ள சமூகம் இருப்பதால் குறிப்பிட்ட காலத்துக்குள் வறுமையை இல்லாது செய்வோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |