ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்: இந்தியாவில் வைத்து சஜித் அளித்த உறுதிமொழி
இந்தியாவுடன் நெருக்கமாகச் செயற்பட இலங்கை எப்போதும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தின் போது அந்நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
"இந்தப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன நடவடிக்கைகள் குறித்து இந்தியாவில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சீன நடவடிக்கைகள் குறித்த இந்திய மக்களின் கவலைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவராக உங்கள் நிலைப்பாடு என்ன?"
சஜித் பிரேமதாச - எதிர்க்கட்சித் தலைவர்
ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்
"இலங்கை பற்றி இந்தியா ஒருபோதும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் இலங்கை இந்தியாவுடன் சிறப்பான உறவைக் கொண்டுள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன்.

எங்கள் இரு நாடுகளின் எதிர்காலம் மிகவும் இணைக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே வைத்திருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேம்படுத்த தயங்கக்கூடாது. புவிசார் அரசியலின் மூலம் மனிதகுலத்திற்கு சாதகமான முடிவுகள் எட்டப்பட வேண்டும். அந்த முடிவுகள் ஒரு மோதலாகவோ அல்லது போராகவோ இருக்கக்கூடாது.ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது. இறுதி முடிவு அமைதியாக இருக்க வேண்டும்.
வல்லரசுகளுக்கு இடையே ஏற்படும் சந்தேகங்கள்
ஒரு நாடாக நாங்கள் ஒரு இடைத்தரகராக செயல்பட்டு அமைதியை கட்டியெழுப்ப விரும்புகிறோம். இந்த வல்லரசுகளுக்கு இடையே ஏற்படும் சந்தேகங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சமாதானத்தின் சிறந்த தூதுவராகச் செயற்படுவதன் மூலம் சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கான செயற்பாட்டிற்கு பங்களிக்க இலங்கை விரும்புகிறது”.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |