நமது நாடு ஏலம் விடும் ஒரு நாடாக மாறியுள்ளது - சஜீத் சுமத்திய குற்றச்சாட்டு
நமது நாடு வங்குரோத்தான நாடு எனவும், சர்வதேச அளவில் அவதனாத்தை செலுத்தும் நாடாக நமது நாடு மாறியுள்ளதாகவும், நமது நாடு ஏலம் விடும் ஒரு நாடாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொம்பே தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “எமது நாட்டிலுள்ள இடங்கள், நம் நாட்டின் வளங்களை அற்ப விலைக்கு விற்க தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாகவும், சர்வதேச நாடுகள் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களும் நமது நாட்டைக்குறிவைத்து, வளங்களைச் சாதகமான விலையில் பெறக்கூடிய உத்திகளை லாவகமாக செயற்படுத்திவருவதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
அரசாங்க பின்புலம்

இருக்கும் பொருளாதாரத்தை சுருக்கி, சிறு தொழில் முயற்சியாளர்களை இல்லாமலாக்கும் கொள்கையையே தற்போதைய அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது. வட்டி விகிதம் 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் இதன் பின்புலத்திலாகும்.
இதனால், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வாய்ப்பில்லாமல் போகும்.பொருளாதாரசெயல்முறை சுருங்கும்.
அரசாங்கம் கையாளும் பொருளாதார சுருக்கக் கொள்கை (economic contraction) முற்றிலும் முட்டாள்தனமானது.88,89 இல் நாடு நெருக்கடியை எதிரநோக்கிய தருணத்தில் மறைந்த ரணசிங்க பிரேமதாஸ பொருளாதாரத்தை சுருக்கும் கொள்கையை கடைப்பிடிக்கவில்லை.
வறியவர்களாக்கும் பொருளாதாரக் கொள்கை

இரு பெரும் உள்ளக பிரச்சினைகள் நாட்டில் நிலவியபோதும் மக்கள் மத்தியில் பணபுழக்கம் காணப்பட்டது. முதலீட்டு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டது. புதிய வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டது.
அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொருளாதாரக் கொள்கையானது மக்களின் வாழ்க்கையை சுருக்கி, மக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, சுருக்கமாகச்சொன்னால், ஜீவனோபாயம் நடத்த முடியுமானவர்களை வறியவர்களாக்கும் இந்த பொருளாதாரக் கொள்கையையே அதிபர் கையாள்கின்றார்.
இதற்கு தான் முற்றிலும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றேன்.ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறும் அதிபரே மறுபக்கம் வரி விதித்து வருகின்றார்.”என தெரிவித்திருந்தார்.