காவல் துறை மா அதிபர் நியமனம் : சஜித் சீற்றம்!
காவல்துறை மா அதிபரின் நியமனம் குறித்து அதிபரினால் 3 ஆவது தடவையாகவும் அதன் பின்னரும் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் எதுவும் அரசியலமைப்பு பேரவையினால் உறுதிப்படுத்தப்பட்டு நியமிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (08) இடம்பெறுகின்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
நிரந்தர நியமனம்
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"காவல்துறை மா அதிபர் நியமன விடயத்தில் 3 மாதங்களுக்குள் 2 சந்தர்ப்பங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நியமனம் வழங்கப்படும் போது, அடுத்த நியமனம் நிரந்தர நியமனமாக இருக்க வேண்டும் என அரசியலமைப்பு பேரவையினால் அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அரசியலமைப்பு பேரவைக்கும்
காவல்துறை மா அதிபரை நியமிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், அதனை அங்கீகரிக்க அல்லது நிராகரிக்க அரசியலமைப்பு பேரவைக்கும் அதிகாரம் உள்ளது.
எனவே அரசியலமைப்பின் ஏற்பாட்டு விதிகளை வியாக்கியானம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.