அமைச்சுப்பதவிகள் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்த சஜித்!
மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சரை பதவி மாற்றி வைத்திருக்கும் அரசாங்கம் மோசடியை அம்பலப்படுத்திய விளையாட்டு அமைச்சரை பதவி நீக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இன்றைய தினம் (30) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
மோசடிகள் வெளிக்கொணரப்பட்டது
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"முன்னாள் சுகாதார அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரிவாக விவாதிக்கப்பட்ட பொது அவர் மீதான மோசடிகள் பேசப்பட்டது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினை இறக்குமதி செய்தமை, புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் ரிடோக்சினன் தடுப்பூசியில் இருந்து 11 கோடி ரூபாய் திருடப்பட்டது போன்ற மோசடிகள் வெளிக்கொணரப்பட்டது.
இவ்வாறான களவு,மோசடிகளில் ஈடுபட்ட சுகாதார அமைச்சின் அப்போதைய அமைச்சரை பாதுகாப்பதற்காக அவரிற்கு வேறு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டது,
ஆனால் அந்தத் திருட்டுகளை வெளிக்கொணர்ந்த ரொஷான் ரணசிங்கவை பதவியிலிருந்து விலக்கி நியாயமற்ற செயல் இடம்பெற்றுள்ளதாக" அவர் தெரிவித்தார்.