தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை - இதுவரை எட்டப்படாத தீர்வுகள்
தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் தேர்தலில் பங்கேற்ற அரச பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை என்றும் சில அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற துணை நிறுவனங்களினது ஊழியர்களுக்கு உரிய விடுமுறை கூட கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை எட்டப்படாத தீர்வுகள்

இந்நிலை அவர்களது சேவைக்காலம் முழுவதையும் பாதிப்பதாகவும், இந்நிலைமைக்கு தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் சுற்றுநிருபம் வெளியிட்டும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியாதது ஏன் எனவும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.