அரச ஊழியர்களுக்கான சம்பளம் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
Government Employee
Government Of Sri Lanka
Money
By Sumithiran
திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் எனவே ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தேவையற்ற அச்சம் வேண்டாம்
எனினும் அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகளுக்கு முன்னுரிமை
அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்