சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை - மக்களை ஏமாற்றும் அரசு - அடித்துக் கூறும் சாணக்கியன்
சித்திரையில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு முன் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்காவே அவசர அவசரமாக நேற்று சட்டமூலத்தை அரசு கொண்டு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) குற்றஞ்சாட்டினார்.
ஊடகங்களுக்கு இன்று (18.2.2025) வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் அரசாங்கத்தில் அதிருப்தி அடைய முன்பு உள்ளூராட்சி தேர்தலை நடத்த அரசாங்கம் அவசர அவசரமாக முயல்வதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.
வரவு செலவு திட்டம் நடைபெறும் காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டி வருவதால் தம்மால் சரியான முறையில் பங்களிப்பு செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்து மேலதிக கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
