நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா : அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையேயான சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (20) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்துள்ள மோதல்களின் விளைவாகவே இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தனிப்பட்ட தகராறுகளால் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. தனிப்பட்ட தகராறு சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதக்கூடாது.
நாட்டில் தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது“ என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
