வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகளைப் பரிசோதித்த சாலிந்தா : அம்பலமான தகவல்
அண்மையில் இந்தோனேசியாவில் (Indonesia) கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5 குற்றவாளிகள் தொடர்பில் நாளுக்கு நாள் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகின்றன.
இந்தநிலையில் நாட்டில் இடம்பெற்ற கமாண்டோ சாலிந்தாவுடன் தொடர்புடைய கொலைச்சம்பவங்களுக்கு அதற்கான ஆயுதங்களை சந்தேகநபர் எவ்வாறு பரிசோதித்தார் என்ற காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதன்படி, வெளிநாட்டில் இருந்து சாலிந்த தொலைபேசி காணொளி அழைப்பின் மூலம் கொலைச் சம்பவங்களுக்கான துப்பாக்கிகளை பரிசோதித்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து சில தகவல்கள் தெரியவந்துள்ளன.
அவர் இந்த நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப பணிகளைத் தொடங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அவர், போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான இரண்டு அடிப்படை இரசாயனங்கள் தோராயமாக 2,000 கிலோகிராம் நாட்டிற்கு இறக்குமதி செய்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஓட்டு தொழிலுக்குத் தேவையான இரசாயனங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டு குறித்த சட்டவிரோத இரசாயனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்காக நுவரெலியா பகுதியில் ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படைப் பணிகளுக்காக சுமார் பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிட்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
