நீதித்துறை சீர்திருத்த விவகாரத்தில் மௌனம் கலைத்த சாலிய - மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முன்னாள் தலைவரான சாலிய பீரிஸும், அரசியலமைப்பின் 22வது திருத்தம் உள்ளிட்ட நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்து தமது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
இருவரும் இதுவரை பகிரங்கமாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்காத நிலையில், அந்த மௌனம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இக்காலத்தில் அரசியலமைப்பைத் திருத்துவது பொருத்தமானதல்ல என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சேர்க்கப்பட்ட திருத்தங்கள்
மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் பலர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தங்கள் நிலைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது மட்டுமே முன்மொழியப்பட்டதாக சாலிய பீரிஸ் கூறியிருந்தார்.
பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மற்ற திருத்தங்கள் சேர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உண்மையான நிலைப்பாடானது , சம்பந்தப்பட்ட திருத்தங்கள் பல சந்தர்ப்பங்களில் விவாதிக்கப்பட்டு, பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே இறுதி வரைவுகள் தயாரிக்கப்பட்டதாக அரசாங்க தரப்புக்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.
நீதித்துறையில் செல்வாக்கு
இருப்பினும், பிரதம நீதியரசரின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதன் மூலம் அரசாங்கம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்தத் தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஆரம்பத்தில் கூட்டாகக் கூறியிருந்தனர்.

இதன்படி சாலிய பீரிஸ் தற்போது திரிபுபடுத்தப்பட்ட பிரசாரத்துடன் இதே போன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதில் இணைந்துள்ளார் என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற இளைஞர்களின் முழக்கத்துடன் 2022 பொதுப் போராட்டத்தில் அங்கம் வகித்த சாலிய பீரிஸ் தற்போது இவ்வாறு முன்வைப்பது குறித்து அரசாங்க தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |