சலேயின் கோட்டா ஸ்குவாட் மிசன்! பீல்ட் மார்சலின் திடுக்கிடும் தகவல்
ராப் (சொல்லிசை) பாடினவன் உள்ளே ரேப்(பாலியல் அத்துமீறல்) செய்தவன் வெளியே என உலாவரும் சொல்லாடலின் பின்னணியில் 24 வயது தமிழ் சொல்லிசை பாடகர் தனது படைப்புக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளேயிருக்க நிலையில் 11 வயது சிறுமியை அத்துமீறலுக்குள்ளாக்கிய 71 வயதான பெரும் பிக்கு பிணையில் வெளியே உலாவும் முரண்நிலை இலங்கையில் தெரிகிறது.
இந்த பின்னணியில் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வு தலையான சுரேஸ் சலே ஒருபெரும் தியாகி என போராட்டக்காரர்களால் கூறப்படுகிறது.
அவர் நாட்டுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் வழங்கிய ஒரு சிங்களச்சிங்கம் என்ற பில்டப்புகளை ராஜபச்ச ஆதரவுமுகங்கள் செய்தாலும் சுரேஸ்சாலே கோட்டாபாயவுக்கான கைப்புள்ளையே தவிர அவர் தமது இராணுவத்துக்கு எதுவும் செய்யவில்லையெனவும் குற்றச்சாட்டுக்களும் காணப்படுகிறது.
கோட்டாபயவின் அனுமதியின்றி சுரேஷ் சலே கழிவறைக்கு கூட சென்றிருக்க மாட்டார் என சிறிலங்காவின் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா புதிதாக வீரியம் பெறும் சலே மேனியாவை தகர்க்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்