இலங்கையிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட நியூஸிலாந்து தாக்குதல்தாரி
அண்மையில் நியூசிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய நபர் இலங்கையிலும் பயங்கரவாதத் தாக்குதலைத் நடத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து ஊடகங்களின்படி, தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள நியூசிலாந்தர்களை தாக்க திட்டமிட்டார்.
இந்த தாக்குதலில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்தியவர் முகமது ஆதில் சம்சுதீன், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. அவர் தீவிரவாதி என்பது பின்னர் தெரியவந்தது. அவரது முகநூல் பக்கத்தை ஆராய்ந்ததில் , இலங்கையில் உள்ள நியூசிலாந்து மக்களுக்கு பாடம் கற்பிக்க இதுபோன்ற ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற தீவிரவாத மனநிலை அவருக்கு இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.
எனினும், காத்தான்குடி பகுதியில் அவருக்கு விசுவாசமான வேறு குழுக்கள் இருக்கலாம் என அந்த அறிக்கைகள் எச்சரிக்கின்றன. நியூசிலாந்தில் நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு தங்களின் முழு ஆதரவை வழங்குவதாக இலங்கை தெரிவித்துள்ளது.