மாவையின் மரணவீட்டுக்கு வரமாட்டேன்! நீங்கள் விரும்பினால் போகலாம்: சாணக்கியன்

Sonnalum Kuttram ITAK
By Independent Writer Jan 31, 2025 01:21 PM GMT
Report

 மாவையின் மரணவீட்டுக்கு நான் வரமாட்டேன் என்றும், மட்டக்களப்பில் இருந்து யாராவது செல்லவிரும்பினால் அற்கான ஏற்பாடுகளை தான் செய்து தருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையினருக்கு அறிவித்துள்ளார்.

சாணக்கியன் நேபாளத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டிருப்பதாகவும், அதனாலேயே அவரால் மாவையின் மரணவீட்டில் கலந்துகொள்ளமுடியாமல் இருப்பதாகக் கூறப்பட்டுவருகின்றது.

இருந்தபோதிலும், மாவையின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே அந்தக் கருத்தரங்கு நிறைவுபெற்றுவிட்டதாகவும், சாணக்கியன் நினைத்திருந்தால் உடனடியாகவே இலங்கைக்குத் திரும்பிவதிருக்கமுடிந்திருக்கும் என்றும் கூறுகின்றார் தமிழரசுக் கட்சியின் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

மாவையின் மரணவீட்டுக்கு மாவையுடன் முன்னர் முரன்டுபட்ட சில முன்நாள் நாடாளுன்ற உறுப்பினர்கள் செல்லமுடியாத நிலை அங்கு காணப்படுகின்றது. மாவையை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி அவரை மரணம் நோக்கி கொண்டுசென்றதான குற்றச்சாட்டுகள், பல தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் மீது சமூகவைத்தளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

மாவையின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அவரது மரணவீட்டுக்குவந்து அரசியல் செய்தால் அவர்கள் மீது தமது கோபத்தை வெளிக்காண்பிப்போம் என்று மாவையின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவையை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியவர்கள் வரிசையில் சாணக்கியனை நோக்கியும் குற்றச்சாட்டுக்கள் சில தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் சாணக்கியன் மாவையின் மரணவீட்டுக்குச் சென்றால் அங்கு வைத்து மவையின் ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் சாணக்கியனை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே மாவையின் மரணவீட்டை சாணக்கியன் தவிர்ப்பதாகக் கூறுகின்றார்கள் சில மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்.

சேச்..சே.. அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் நாங்களும் நம்புகின்றோம். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016