சனத் நிஷாந்த உயிரிழப்பு : சாரதி வெளியிட்ட முக்கிய தகவல்

Colombo Sri Lanka Highways In Sri Lanka Sanath Nishantha
By Sathangani Jan 26, 2024 04:47 AM GMT
Report

இலங்கையின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்று (25) அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கந்தானை மொரவத்த பகுதியில் இடம்பெற்ற இந்த கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு காவல்துறை உத்தியோகத்தர் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சரின் சாரதியான பிரபாத் எரங்க ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கோர விபத்தில் சிக்கிய இளைஞன் பலி! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

கோர விபத்தில் சிக்கிய இளைஞன் பலி! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

வாகன சாரதி கைது 

விபத்து தொடர்பாக சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாகன சாரதியான பிரபாத் எரங்க காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சனத் நிஷாந்த உயிரிழப்பு : சாரதி வெளியிட்ட முக்கிய தகவல் | Sanath Nishant Death Accident Driver S Information

“முடிந்தளவு தாமதமின்றி கொழும்பு வருவதற்கு நினைத்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் இருந்த காரை முந்திச் சென்றேன்.

நான் ஜீப்பை மீண்டும் வலதுபுறம் உள்ள பாதையில் கொண்டு செல்ல முயன்றபோது, ​​முன்னால் இருந்த கொள்கலன் பாரவூர்தி மீது மோதியது. பின்னர் ஜீப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வேலியில் மோதி நின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை, தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

ஜீப்பில் சிக்கியிருந்த இராஜாங்க அமைச்சர் 

இது தொடர்பான விசாரணையில் விபத்தின் போது ஜீப் வண்டி  மணிக்கு 160 கிலோ மீற்றருக்கு மேல் வேகத்தில் செலுத்தப்பட்டதாகவும், ஜீப் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சனத் நிஷாந்த உயிரிழப்பு : சாரதி வெளியிட்ட முக்கிய தகவல் | Sanath Nishant Death Accident Driver S Information

விபத்தின் பின்னர் ஜீப்பில் சிக்கியிருந்த இராஜாங்க அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை மீட்க காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் காயமடைந்தவர்களை ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட பினன்ர்

சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (24) மாலை நாடாளுமன்ற அமர்வில் பங்குபற்றிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குருநாகல் மற்றும் சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற இரண்டு திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.


இந்நிலையில் அவர் தனது மூத்த சகோதரரை சந்தித்து விட்டு நள்ளிரவில் கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்தை சந்தித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்