சொந்த ஊரிற்கு எடுத்து செல்லப்பட்ட சனத்தின் உடல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் தற்போது புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பொது அஞ்சலிக்காக நேற்று பிற்பகல் முதல் பொரளையில் உள்ள தனியார் மலர்ச்சாலையில் சனத் நிஷாந்தவின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
இதன் போது, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இறுதி அஞ்சலி
அத்துடன், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் மறைந்த சனத் நிஷாந்தவுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை 12.00 மணியளவில் மறைந்த இராஜாங்க அமைச்சரின் சொந்த ஊரான ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திற்கு தற்போது அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி அவரது இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளன.