சனிப் பெயர்ச்சி - ஆட்டிப்படைக்கப் போகும் 'அஷ்டமத்து சனி' : இரட்டிப்பு பலன்களை அள்ளப்போவது இவர்கள் தானாம்..!
சனிப் பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழ இருக்கிறது.
சனி பகவான் கடந்த 2022 ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரை மகரத்திலிருந்து கும்பத்திற்கு வேகமாக முன்னோக்கி அதிசாரமாக சென்றார்.
ஜூலை 5 முதல் ஜூலை 12ஆம் திகதி வரை வக்ர நிலையாக அதாவது பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகரத்திற்கு வந்தடைந்தார்.
இவர் ஒக்டோபர் 23ஆம் திகதி வரை மகரத்தில் வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பின்னர் சாதாரண நிலையில் நேர் கதியில் நகரத் தொடங்குவார்.
சனி பகவான் 2023 ஜனவரி 17ஆம் திகதி முறையாக மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.
இந்தக் கிரகப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாக அமர்ந்து ஆட்டிப்படைக்கப்போகிறார் சனிபகவான். ஆனால், மிதுன ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் காத்திருப்பதுடன், பாக்ய சனி பலன்களை அள்ளித்தரப்போகிறார் என்றும் ஜோதிடம் கூறுகிறது. இவை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நெருங்கும் சனிப் பெயர்ச்சி : யாருக்கு ஏழரை..! தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..! |
கடகம்
அஷ்டமத்து சனியால், கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வேலை செய்யும் இடத்தில் வீண் வாக்குவாதங்கள் செய்து யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
விபரீத ராஜயோகம்
எட்டில் சனி வருவது விபரீத ராஜயோக காலம். அஷ்டமாதியான சனி பகவான் சில பிரச்சினைகளைக் கொடுப்பார். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு 2,5,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலை விசயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்கியத்தில் சற்று தடையேற்பட்டு பின் விருப்பம் பூர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும்.
நிதி நெருக்கடி
அதிக கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்வது ஆபத்தானது. அகலக்கால் வைக்க வேண்டாம். இரவு நேர பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வண்டி வாகனம் வாங்குவதற்கு இது சரியில்லாத நேரம். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சொற்படி கேட்டு நடப்பது நல்லது.
கடவுள் நம்பிக்கை
விதி கிரகம் சனி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். விபரீத ராஜயோக காலம் என்றாலும் இறை நம்பிக்கை அவசியம் தேவைப்படும் காலமாகும். கவனமாக இருக்க வேண்டிய காலம். வீட்டிலும் வெளியிடங்களிலும் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. திருமணம் செய்வது பற்றி இப்போது யோசிக்கவே வேண்டாம்.
சுப காரிய வெற்றி
புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் புதிய தொழில்கள் தொடங்கலாம் என்றாலும் தசாபுத்தியை பார்த்து நன்கு ஆலோசிக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புது இடங்களில் சென்று சாப்பிடும் போது கவனம் தேவை. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. படிப்பினைகளையும் கஷ்டங்களையும் கொடுக்கும் சனிபகவான் இறுதியில் விபரீத ராஜயோகத்தையும் தருவார் என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பாதகத்தை விட சாதகமே அதிகம் காணப்படும்.
செப்டம்பர் மாத ராசிபலன்! கிரகப் பெயர்ச்சியில் வக்ர நிலை - பேரதிர்ஷ்டத்தைப் அள்ளப்போகும் ராசிக்காரர் இவர்கள் தானாம் |
மிதுனம்
சனிபகவான் கடந்த 5 ஆண்டு காலமாக மிதுன ராசிக்காரர்களை படாதபாடு படுத்திவந்தார். கண்டச்சனியால் கவலைப்பட்டீர்கள். அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டீர்கள். இனி உங்களின் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வரப்போகிறது. என்னடா வாழ்க்கை என்று வெறுத்துப்போய் இருக்கும் உங்களுக்கு சனிபகவான் இனி மன நிம்மதியைத் தரப்போகிறார். வரும் ஜனவரி மாதம் முதல் சனிபகவானின் பயணம் ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போகிறது. பாக்ய சனி பலன்களை அள்ளித்தரப்போகிறார் என்பதால் இப்போதே அனுபவிக்க தயாராகுங்கள்.
கஷ்டங்கள் நீங்கும்
அஷ்டம சனி காலத்தில் நிறைய அவமானங்களை பட்டு இருப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான பிரிவினை ஏற்பட்டிருக்கும். ஒரு சிலரோ நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவை சந்தித்து இருப்பீர்கள். இனி உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், கஷ்டங்கள் முடியப்போகும் காலம் வந்து விட்டது. இன்னும் சில மாதங்களில் அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து விடுபடப்போகிறீர்கள். பயம் பதற்றம் நீங்கப்போகிறது. கணவன் மனைவி பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.
நிதிப்பிரச்சினை தீரும்
கடந்த சில ஆண்டுகாலமாகவே பணப்பிரச்சினை, கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்து வந்த உங்களுடைய பொருளாதார நிலைமை சீரடையப்போகிறது. பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் இனி உங்களைப் புரிந்து கொள்வார்கள். கடன் பிரச்சினையால் சிலர் தற்கொலை வரை சென்று மீண்டிருப்பீர்கள். இனி உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கப்போகிறீர்கள். சில மாதங்களில் குரு பார்வையால் நல்ல விஷயங்கள் நடந்திருக்கும் எனவே இனி கவலைப்பட வேண்டாம் கஷ்டங்களில் இருந்து கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது.
உடல் ஆரோக்கியம்
பாடசாலை மாணவர்களுக்கு இனி பாடங்கள் இலகுவில் புரியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சினை முடிவுக்கு வரும். உறவுகளால் ஏற்பட்ட பகைகள் நீங்கும். பழைய நண்பர்களின் உதவி வீடு தேடி வரும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்