நெருங்கும் சனிப் பெயர்ச்சி : தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!
பொதுவாக சனி பகவான் இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
கர்ம காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவானின் பெயர்ச்சி, ஜோதிட ரீதியில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நீதி, செயல்பாடு, பலன்கள் இருக்கும். அதில் சனி பகவான் நம் வினைகளுக்கு ஏற்ற நன்மை மற்றும் தண்டனை தரக்கூடிய கிரகமாக செயல்படுவதால், அவரின் கோள்சார அமைப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
திருக்கணித பஞ்சாங்கம் முறைப்படி, சனி பகவான் வரும் டிசம்பர் 20ஆம் திகதி அன்று பெயர்ச்சி அடைகிறார் இந்த விழா திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
நம்முடைய ஜாதகத்தில் சனி பகவான் அமைந்துள்ள இடத்தை பொறுத்தும், கோள் சாரத்தின் நிலையில் நம்முடைய ராசிக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என தெரிந்து கொள்ள முடியும்.
2023 டிசம்பர் 20ல் நடக்கக்கூடிய சனி பெயர்ச்சியால் அடுத்த இரண்டு வருடங்கள் எந்த ராசிக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
சனிபகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வருமானம் அதிகரிக்கும். ஆதாயங்கள் அனைத்தும் கிடைக்கும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.
ரிஷப ராசி
சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்து அதிக வாய்ப்பு உள்ளது. இறைவழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுன ராசி
சனிபகவான் உங்களுக்கு நன்மைகளை செய்யப் போகின்றார். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானால் யோகம் கிடைக்கப் போகின்றது. பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது.
பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |