புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிக்க நாடாளுமன்றம் இணக்கம்
புதிய சட்டமா அதிபராக பதில் மன்றாடியார் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணத்தை நியமிக்க நாடாளுமன்றப் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. அதற்கமைய, பிரதி மன்றாடியார் நாயகம் சஞ்சய் ராஜரட்ணத்தை சட்டமா அதிபராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவைக்கு ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதியின் தீர்மானத்துடன் இசைந்து செல்ல முடிவு செய்துள்ளது.
சஞ்சய் ராஜரட்னம், 2019 ஆம் ஆண்டில் பொது சேவை ஆணைக்குழுவால் பிரதி மன்றாடியார் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
அப்போதைய பிரதி மன்றாடியார் நாயகம் தில்ருஷி டயஸிற்கும், அவந்த்-கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதிக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் சர்ச்சையை தொடர்ந்து, பிரதி மன்றாடியார் நாயகமாக சஞ்சய் ராஜரத்தினம் நியமிக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கது.