சாந்தனின் நிலைக்கு இதுவே காரணம்: நாடாளுமன்றில் வெளியான உண்மை
Tamils
Ali Sabry
Government Of Sri Lanka
Government Of India
Charles Nirmalanathan
By Shadhu Shanker
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் அக்கறையின்மை காரணமாகவே சாந்தன் என்ற நல்ல மனிதரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (5) கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர், அசமந்த போக்கினாலும் இராஜதந்திர நகர்வுகளாலும் அவர் உயிருடன் வர கூடாது என்ற எண்ணக்கருவில் அவருக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை.
இந்திய அரசாங்கம் நினைத்திருந்தால் அவர் இன்று வந்து அவருடைய தாய் மற்றும சகோதரர்களுடன் வாழ்ந்திருக்க முடியும்.
தமிழர்கள் எனும் போது வெளியுறவுத்துறை அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்