சாந்தனின் இலங்கை வருகை: உறுதியளித்த ரணில்
சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிபர் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அதிபருடனான இன்றைய(3) சந்திப்பின் பின்னர் சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விடுதலை செய்யப்பட்ட சாந்தன் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சாந்தன் விவகாரம்
அவரது வருகைக்காக அவருடைய தாயார் பலவருடங்களாக காத்துக்கொண்டிருப்பதோடு தனது இறுதிக் காலத்தில் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.

நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் இன்றையதினம் (03) அதிபர் சந்தித்து சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து பேசினோம்.
இந்நிலையில், அதிபர் நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக கூறியுள்ளதோடு சாந்தன் தாயாரிடமிருந்து ஒரு கடிதமும், எங்களுடைய தரப்பிலிருந்து ஒரு வேண்டுகோள் கடிதமும் வழங்குமாறு கோரியுள்ளார்.
நாங்கள் நாளையதினம் அந்த கடிதங்களையும், சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அதிபரிடம் வழங்குவோம்.சாந்தனை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் செயல் வடிவில் செய்வோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening