வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் சப்புகஸ்கந்த ஊழியர்கள்
Trincomalee
Sri Lankan Peoples
Sapugaskanda
By Sathangani
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதால் 650க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைகள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் தற்போதுள்ள ஊழியர்களில் சுமார் 200 பேரை அரச நிறுவனங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சுத்திகரிப்பு நிலையத்தின் பழைய உட்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் தற்போதுள்ள முதலீட்டுத் தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலைக்கு மாற்ற
சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை குறைந்தபட்சம் இன்னும் 25 ஆண்டுகளுக்கு உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இதேவேளை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி