சந்தையை கட்டுப்படுத்த அவசரகால விதியெனில் போரை சமாளிக்குமா அரசாங்கம்? சரத்பொன்சேகா கேள்வி
சந்தையை கட்டுப்படுத்த அவசரகால சட்டத்தை விதித்தால் அரசாங்கம் ஒரு போரைச் சமாளிக்க முடியும் என தான் கருதவில்லை என முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவு விலையைக் கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் இன்னும் பல கட்டுப்பாடுகளை உபயோகிக்கலாம். எந்த பேரிடரையும் கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை சட்டம் இருக்கும் போது அவசரகால விதிமுறைகளை விதிப்பதற்கான அரசாங்கத்தின் நோக்கங்கள் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் விதிக்கக்கூடிய வேறு பல கட்டுப்பாடுகள் உள்ளன. சந்தையை கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் அவசரகால சட்டத்தை விதித்தால், அரசாங்கம் ஒரு போரைச் சமாளிக்க முடியும் என நான் நினைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.