அப்பம் விற்ற சரத் பொன்சேகா - நாடாளுமன்றில் வெளிவந்த தகவல்
parliament
sarath fonseka
mahinthanantha aluthgamage
By Jaso
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சர்த் பொன்சேகாவுக்கு எதிராக அமைச்சர் மகிந்தானந்தா அளுத்கமகே கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர்> சரத் பொன்சேகா அப்பம் விற்றவர் எனவும் ஒருபோதும் பீல்ட் மார்ஷல் நிலைக்கு தகுதி அற்றவர் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வாய்மொழி மூல வினாவிடை பகுதியின் போது சரத் பொன்சேகாவிடம் சண்டையிடுவது போன்று மஹிந்தானந்த பேசினார். தன்னை தூண்டி ஆடைகளை அவிழ்த்துக் கொள்ள வேண்டாம் என சரத் பொன்சேகாவிடம் மஹிந்தானந்த தெரிவித்தார்.
சரத் பொன்சேகா என்பவர் அப்பம் விற்றுக் கொண்டிருந்தவர் எனவும் அவரை இராணுவத் தளபதியாக்கினால் இவ்வாறுதான் நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி