13 ஐ நடைமுறைப்படுத்த முடியாது - இது பெளத்த நாடு: அண்ணாமலைக்கு சரத் பதிலடி!
"காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் இந்தியத் தரப்பினர் வலியுறுத்துவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்."
இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட கருத்திற்கு பதில் வழங்கும் போதே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சரத் வீரசேகர

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கருத்தானது, தமிழர் தாயகத்தை மறைமுகமாக கேட்பதாக உள்ளது.
வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலேயே உள்ளது என அண்ணாமலை வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
13 ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை விடுத்து, அதனை நாடாளுமன்றத்தின் ஊடாக இல்லாதொழிக்கும் செயல்பாட்டையே முன்னெடுக்க வேண்டும்.
பிக்குகள் வீதியில் இறங்கி 13 க்கு எதிராக போராடுவது அண்ணாமலைக்கு தெரியவில்லையா, அதைவிட இது ஒரு பெளத்த நாடு என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ளவேண்டும்." என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.