தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவரும் கேள்வி கேட்க முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர காட்டம்
srilanka
sarath weerasekara
shanakiya rasamanickam
By Vasanth
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி கேட்க எவருக்கும் உரிமையில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றையதினம் காலை நாடாளுமன்றம் கூடியபோது வடக்கில் பாரிய அளவு காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்க எவருக்கும் உரிமையில்லை என்று குறிப்பிட்டதுடன், வடக்கு கிழக்கு பகுதிகளில் 96 சதவீத காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி