நான் வழங்கிய சாட்சியங்களை விசாரித்திருந்தால் சரத் வீரசேகர இன்று சிறையிலிருந்திருப்பார் - சமூக செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

Sarath Weerasekara Jail CID SriLanka Shehan Malaka
By Chanakyan Nov 17, 2021 07:42 AM GMT
Report

தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கிய சாட்சியங்கள், வாக்கு மூலங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) இன்று சிறையிலிருந்திருப்பார் என சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக (Shehan Malaka) தெரிவித்துள்ளார்.

அருட் தந்தை சிறில் காமினி விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக  கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

அமைச்சர் சரத் வீரசேகர உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டியவர். அதற்கான சாட்சியங்களை தான் குற்றப் புலனய்வுத் திணைக்களத்திடம் வழங்கியுள்ளேன்.

அனைவருக்கும் ஒரே சமனாக சட்டம் அமுல் செய்யப்பட வேண்டும் என்பதேயே தான் நியாயத்தை நிலைநாட்டும் நிறுவனங்களிடம் விடுக்கும் கோரிக்கை. தற்போது சிவில் சமூகம் விழித்துக்கொண்டுள்ளது. இளைஞர்கள் எழுந்துவிட்டனர்.

தமது ஊடக அதிகாரம், இராணுவ அதிகாரத்தைக் கொண்டு அனைத்தையும் மறைக்க முடியும் என எவரேனும் நினைத்தால், அது சாத்தியமற்றது. அன்று கூறியதைப் போலவே இன்றும் கூறுகின்றேன். நாம் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவோம்.

சுரேஷ் சாலேவுக்கோ இந் நாட்டு உளவுப் பிரிவுக்கோ எம்மை கீழ்படிய வைக்க முடியாது. இராணுவம் மொஹிதீன், காவல்துறை பாயிஸ், மொஹம்மட் நியாஸ் ஆகியோரைப் போன்றே சஹ்ரானின் மைத்துனர் அன்சார் தொடர்பிலும் அரச தலைவர்ஆணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் யார்? இவர்கள் உளவுத் துறை உறுப்பினர்கள் இல்லையா? உளவுத் துறையுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருந்ததா இல்லையா? இவர்கள் உளவுத் துறைக்கு தகவல் அளிப்போராக இருந்தார்களா இல்லையா?' 

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா அளித்த சாட்சியின் ஒலிப்பதிவொன்று தற்போது வத்திகானுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்கத்திடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி