நாடாளுமன்றில் நீதிபதி இளஞ்செழியனை எடுத்துக்காட்டி உரையாற்றிய சரத் வீரசேகர
சரத் ஹேமசந்திர எனும் சிங்கள பௌத்த காவல்துறை அதிகாரியே யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் உயிரைக் காப்பாற்றினார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,
“குறித்த சம்பவத்தினைத் தொடர்ந்து சரத் ஹேமசந்திரனின் இரு பிள்ளைகளினதும் கல்வி நடவடிக்கைகளுக்கான முழு பொறுப்பையும் தமிழ் நீதிபதியான இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டார்.
அத்துடன் அவரது வீட்டையும் கட்டிக் கொடுத்துள்ளார். இதற்கு வெளிநாடுகளில் உள்ள அவரது தமிழ் நண்பர்கள் உதவினார்கள்.
குறித்த செயற்பாடுக்கு நன்றி செலுத்துவதற்காக எனது மூத்த சகோதரன் மேஜர் ஜெனரல் ஆனந் வீரசேகர அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
இனப்பிரச்சினை இல்லை

எனவே எமக்கிடையில் தமிழ்-சிங்கள வேறுபாடுகள் காணப்படவில்லை. பௌத்த-இந்து மோதல்களும் இல்லை. அதனை புதிதாக உருவாக்க வேண்டாமென நான் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.