சரிகமப மேடையில் அசத்தும் ஈழத்தின் வாரிசு : கடைசியில் நடந்த சோகம்
ஈழத்திலிருந்து அகதியாக சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்த இளைஞர் ஒருவர் தனது திறமையினை வெளிக்காட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் அனைவரின் மனங்களையும் வென்றுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த வகையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் அதேநேரம் இலங்கையில் பல்வேறு சர்ச்சையை கிளப்பிய ஒரு நிகழ்ச்சி தான ஜீ தமிழ் (ZEE Tamil) சரிகமப.
சரிகமப நிகழ்ச்சி
தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோடில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சனி மற்றும் ஞாயிற்று Introduction Round நடைபெற்றது.
இதில், ஈழத்திலிருந்து அகதியாக சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்து சென்ற பிரஷானும் கலந்துக்கொண்டார்.
பிரஷான், இலங்கை குடியுரிமை இல்லாமலும், சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் 30 நாள் விசாவில் இந்தியா வந்து சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பாடியிருப்பது அனைவரது மனதையும் உருகவைத்திருக்கிறது.
இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் தான் புலம்பெயர்ந்து வாழும் நாடான சுவிஸ் நாட்டிற்கு செல்வதற்கு 6 மணித்தியாலங்கலே காணப்பட்ட நிலையில் அவர் பாடியுள்ளார்.
பிரஷானின் வீசா முடிவடையவுள்ள நிலையில் பாடி முடித்து விட்டு மீண்டும் சுவிஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
மீண்டும் இந்தியா வருவதற்கான வாய்ப்பு கிடைத்தால் சரிகமப நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        