தனது நற்பெயருக்குக் களங்கம்...! வைத்தியர் சத்தியமூர்த்தி காவல்துறையில் முறைப்பாடு
அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராகக் காவல்துறையில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் அவர் தனது முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
போதனா வைத்தியசாலை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். போதனா வைத்தியசாலைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்ட தினசரி பத்திரிகைகளுக்குள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இணைத்து விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு யாழ். நகரப் பகுதியில் இத்துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தொன்று தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சத்தியமூர்த்தி முறைப்பாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |