இன்று முதல் குறைவடையவுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (15) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை குறைப்பு இன்று (15) முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்த அவர், 12 வகையான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொருட்களின் விலை குறைப்பு
இதற்கமைய, சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 55 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1095 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராம் 50 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1200 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ கிராம் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
டின் மீன் 425 கிராம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 575 ரூபாவாகும். காய்ந்த மிளகாய் ஒரு கிலோ கிராம் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1210 அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை
பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 365 ரூபாவாகும். வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 13 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 275 ரூபாவாகும்.
உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாவாகும். சிவப்பரிசி ஒரு கிலோ கிராம் 06 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 174 அறிவிக்கப்பட்டுள்ளது.
டின் மீன் 155 கிராம் 05 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 290 ரூபாவாகும்.
பாஸ்மதி அரிசி ஒரு கிலோ கிராம் 05 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 760 ரூபாவாகும். நிலக்கடலை ஒரு கிலோ கிராம் 40 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1300 அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |