தேர்தலையடுத்த ஆட்சியில் தமிழ் கட்சிகளுடன் இணைய தயார் : சத்தியலிங்கம் அறிவிப்பு
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை தவிர்ந்த அனைத்து சபைகளிலும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி போட்டியிடுகின்றது.
எல்லைப்புற மாவட்டம்
எல்லா சபைளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம், எமது மாவட்டம் ஒரு எல்லைப்புற மாவட்டம்.
எமது மாவட்ட ஆட்சி அதிகாரம் இந்த மண்ணின் எமது பூர்வீக கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும், அந்த அடிப்படையில் இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம்.
இந்த மக்களின் தேவைகள பூர்த்தி செய்து அபிவிருத்தி நோக்கி நகர்வோம், அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம், எல்லா சபைகளிலும் தமிழ் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்புள்ளது.
தேசியக் கட்சிகள்
எமது மத்திய குழுவில் ஒரு சின்னத்தின் கீழ் சேர்ந்து பயணிப்பது முடியாத சந்தர்ப்பத்தில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது, இந்த தேர்தல் முறையில் தனிக் கடசி ஆட்சி அமைக்க முடியாது.
சேர்ந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் இருந்து தமிழரசுக் கட்சி விலகவில்லை. வவுனியா வடக்கில் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் பேசினோம்.
சில காரணங்களால் அது சரிவரவில்லை ஆனால் நிச்சயமாக சேர்ந்து ஆட்சி அமைப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்