விடுதலைப் புலிகளைப் போற்றும் சத்யராஜ் : காவல்துறையில் பதிவான முறைப்பாடு
தமிழக நடிகர் சத்யராஜ் (Sathyaraj) மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரத் ஹிந்து முன்னணி அமைப்பினால் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்ப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சென்னையில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் பங்கேற்று உரை நிகழ்த்தியிருந்தார்.
அதன்போது, இந்துக் கடவுள்கள் கற்பனை, மிகைப்படுத்தப்பட்ட மாயை என அவர் குறிப்பிட்டமைக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது, தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரையும் அதன் தலைவரையும் அவர் புகழ்ந்து பேசியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
