சனி ராகு சேர்க்கையால் ஆபத்தை எதிர்நோக்கவுள்ள மூன்று ராசியினர் : ஒக்டோபர் 17 வரை எச்சரிக்கை
சனி ராகு சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்கள் பணப்பிரச்சினைகளை சந்திக்க உள்ளனர்.
சனி பகவான் ராசி மாற்றம் மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்திலும் மாற்றமும் நிகழும்.
அப்படி மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில், சதய நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.

சதய நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். ராகுவின் நட்சத்திரத்தில் சனி பயணிப்பதால், ஒக்டோபர் 17 வரை சில ராசிக்காரர்கள் பண விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் சனி ராகு சேர்க்கையால் நிறைய ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறுக்கு வழியில் அல்லது தவறான வழியில் பணத்தை சம்பாதிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதனால், உங்கள் மீது இருந்த மரியாதை போகலாம். உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
கும்ப ராசி
கும்ப ராசியின் சதய நட்சத்திரத்தில் சனி பகவான் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் சிரமங்கள் அதிகரிக்கும்.
ஒக்டோபர் 17 வரை இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும், இந்த காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்குவதற்கான சூழல் உருவாகும். குடும்பத்தினருடன் வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.
மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
கடக ராசிக்காரர்கள்
கடக ராசிக்காரர்கள் ஒக்டோபர் 17 வரை கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் அதிக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.