சவுதி பிரஜைகளை உடன் வெளியேற உத்தரவு
Saudi Arabia
Lebanon
Kuwait
By Sumithiran
லெபனானில் தங்கியுள்ள சவுதி பிரஜைகளை விரைவில் அங்கிருந்து வெளியேறுமாறு சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், லெபனானில் உள்ள சவுதி தூதரகம், ஆயுத மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் தங்குவதை தவிர்க்குமாறு சவுதி அரேபிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்லாமிய போராளி குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்

லெபனானில் உள்ள பலஸ்தீன முகாம் ஒன்றில் இஸ்லாமிய போராளி குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து இந்த அறிவித்தல் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, குவைத் அரசாங்கமும் பலஸ்தீனத்தில் தங்கியிருக்கும் அதன் குடியிருப்பாளர்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது.
லெபனானில் 12 பலஸ்தீனிய அகதிகள் முகாம்கள் உள்ளன, அதில் சுமார் 250,000 அகதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி