வெளிநாடொன்றில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் - எடுக்கப்பட்ட நடவடிக்கை
சவுதி அரேபியாவில் பணிப்பெண்களாக சென்ற நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த விவரங்களை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.
சவுதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், அவர்களை விடுவிக்க சவுதி ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இலங்கையில் விமானத்தை தரையிறங்க அனுமதிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, சவுதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள 156 இலங்கை பெண்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.