வைத்தியர் அர்ச்சுனாவின் எழுச்சி: தலைவர் பிரபாகரன் வழியில் எதிரொலித்த இன்னொரு குரல்
துரோகத்தின் பிடியால் முடக்கப்பட்ட தமிழர் சமூகத்திலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழியில் மற்றுமொறு குரல் எழுந்துள்ளது.
தமிழர் பகுதியில் தற்போது பிரதான பேசுபொருளாக சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், சரியான விடயத்திற்கு மக்கள் குரல் கொடுப்போம் என்ற ரீதியில் கடந்த வாரங்களாக சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு மக்கள் கரம் கொடுத்து வருகின்றனர்.
அர்ச்சுனாவை கொண்டாடும் தமிழர் சமூகம்
இதனடிப்படையில், வரப்போகும் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் தமிழர்களுக்காக குரல் கொடுத்த அர்ச்சுனாவை தற்போது தமிழர் சமூகம் கொண்டாடி வருகின்றது.
எங்கிருந்து இவ்வளவு தைரியம் என்று பூரிப்பவர்களுக்கு அவர் வெளியிட்ட காணொளியில் உள்ள வார்த்தைகள் பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.
இந்தநிலையில், சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த காணொளியொன்றில், “நான் யாழ்ப்பாண தமிழன் எனவே நான் ஒன்றுக்கும் பயப்படப்போவதில்லை.
தவறிழைப்பவர்களால் என்ன செய்ய ஏலும்? என்னை வேலையிலிருந்து அகற்ற ஏலும் இல்லையென்றால் எங்கும் வெளியில் போகும் போது என்னை வெட்டுவார்கள். ஊருக்காகத்தானே சாகப்போகின்றேன்.
தமிழ் சமூகத்திற்கான குரல்
மேலும், தலைவரும் ஊருக்காகத்தான் இறந்தார் அத்தோடு இருந்தால் தலைவன் இல்லையென்றால் இறைவன்” என அவர் தெரிவித்திருந்தார்.
குறித்த வார்த்தைகள் ஒவ்வொரு தமிழனின் தைரியத்திற்கும் மற்றும் தன்னம்பிக்கைக்கும் பின்னால் ஒலிக்கும் குரலை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
இந்தநிலையில், முதுகில் குத்தி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு குரல் எழும்பியுள்ள நிலையில் இது தமிழ் சமூகத்திற்கான எழப்போகும் அடுத்த குரல்களுக்கு அத்திவாரமாக இருக்குமெனவும் நம்பப்படுகின்றது.
மேலும், தமிழனுக்கான பிரச்சினையில் தனித்து போராடவிடாமல் சமூக ஊடகத்தை கொண்டு ஆதவளித்தமையும் பெரிய விடயமாகவே பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |