சபாநாயகர் அலுவலக செலவுகளில் ரூ.32 கோடிக்கும் அதிகமான சேமிப்பு
சபாநாயகர் அலுவலகத்தின் மீண்டெழும் செலவுகள் குறைவடைந்துள்ளதுடன், இரண்டு ஆண்டுகளிலும் மொத்தமாக 32 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மீதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துடன் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்கான மொத்த வருடாந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடாக 277,950,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 229,400,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் போக்குவரத்துச் செலவு
அதன்படி, 2025ஆம் ஆண்டில் 179,943,881 ரூபாயும், 2026ஆம் ஆண்டில் 143,088,512 ரூபாயும் செலவிடப்படாமல் மீதமாகியுள்ளன.

இவ்விரு ஆண்டுகளிலும் மொத்தமாக 323,032,393 ரூபாய் (32 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமான தொகை) மீதமாகியுள்ளதாகக் குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மீண்டெழும் செலவுகளின் கீழ் எரிபொருள் செலவுக்கான வருடாந்த ஒதுக்கீடு 2025ஆம் ஆண்டில் 81 மில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டில் அது 31 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துச் செலவுகளுக்கான வருடாந்த ஒதுக்கீடு 2025ஆம் ஆண்டில் 5 மில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் அது 8 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |