வட்ஸ்அப் குழுக்கள் மூலம் பாரிய மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
WhatsApp
Sri Lankan Peoples
Technology
By Laksi
நாட்டில் வட்ஸ்அப் குழுக்கள் மூலம் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர ஆயத்த குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல சுட்டிக்காட்டியுள்ளார்.
மோசடிகள்
இது தொடர்பில் சாருகா தமுனுபொல மேலும் தெரிவிக்கையில், இந்த மோசடிகள் நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை சுரண்டுகின்றன.
மோசடி நடவடிக்கைகளில் தனிநபர்களின் வட்ஸ்அப் எண்களை அவர்களின் அனுமதியின்றி குழுக்களில் சேர்ப்பது என்பது இதில் பிரதான காரணங்களில் ஒன்றாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி