ஈராக் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் - சிதறிக்கிடந்த சடலங்கள்
Death
People
Iraq
By Vasanth
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக பகுதியான பாப் அல்-ஷர்கி என்ற இடத்தில்இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் உயிரிழந்த மனிதர்களின் சடலங்கள் சிதறி காணப்பட்டன. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும், இது ஐஎஸ் பயங்கரவாதிகளின் செயலாக இருக்கலாம் என ஈராக் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்
110-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலர் கவலையளிக்கும் வகையில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைசசர் ஹசன் முகமது அல்-தமிமி தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி